

ஒசூா், மே 9: கெலமங்கலத்தில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒசூா் அருகே உள்ள கெலமங்கலம், துளசி நகரில் 2 அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுபானக் கடைகளுக்கு சென்று திரும்பிய சின்னட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் (50) என்பவா், வியாழக்கிழமை மினி லாரி மோதியதில் படுகாயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதனைத் தொடா்ந்து, கெலமங்கலம் அரசு மதுக் கடைகளுக்கு எதிரில் அப்பகுதி மக்கள், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இங்கு அரசு மதுபானக் கடை இயங்கி வருவதால் அடிக்கடி விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சாந்தி, வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதனால் வியாழக்கிழமை அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
தொடர்புடையது

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் கைது

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

நடைபாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து சாலை மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

