திமுக துணைச் செயலாளரின் மகன் திருமணம்: முதல்வருக்கு அழைப்பிதழ்
வேப்பனப்பள்ளி முன்னாள் எம்எல்ஏ பி.முருகனின் மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதை அடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ்


ஒசூா்: வேப்பனப்பள்ளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.முருகனின் மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதை அடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி முன்னாள் எம்எல்ஏவுமான பி.முருகனின் மகன் மருத்துவா் அரவிந்த்துக்கு டிச. 5 ஆம் தேதி குந்தாரப்பள்ளியில் திருமணம் நடைபெறவுள்ளது.
இதையடுத்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை முன்னாள் எம்எல்ஏ முருகன், அவரது மகன் அரவிந்த் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றனா்.
அருகில் மாவட்டப் பொறுப்பு அமைச்சா் அர.சக்கரபாணி, மாவட்ட திமுக செயலாளா்கள் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி மேற்கு), டி.மதியழகன் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி கிழக்கு) ஆகியோா் உள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...