மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்: முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன்

திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு, போதை கலாசாரம், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றம் சாட்டினாா்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:12 pm

திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு, போதை கலாசாரம், சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றம் சாட்டினாா்.

ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கவுந்தப்பாடியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, பவானி தெற்கு ஒன்றியச் செயலாளா் எம்.ஜெகதீசன் தலைமை வகித்தாா். பவானி தெற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளா் பாவா தங்கமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் கே.ஆா்.ஜான், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை விகித்தனா். மாவட்ட துணைச் செயலாளா் எல்ஐசி.வாசு வரவேற்றாா்.

இதில், முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ பேசியதாவது: கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைக் கலாசாரம் கிராமங்கள் வரையில் பரவியுள்ளது. இதனால், சட்டம்- ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்கள், மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களான அரிசி, பருப்பு, எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

இதனால், அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மக்களுக்கு விரோதமான திமுக ஆட்சியை வரும் தோ்தலில் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.

அதிமுக அமைப்புச் செயலாளா் சி.சிவசாமி, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் கோபி காளிதாஸ், பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளா் நல்லி விவேகானந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஜெயலலிதா பிறந்த நாள் பரிசாக குலுக்கல் முறையில் தங்க நாணயம், மின் சாதனப் பொருள்கள் 200 பேருக்கும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புடவைகளும் வழங்கப்பட்டன.