கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி: தமிழக வீரா் முதலிடம்

ஒசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த வீரா் முதலிடமும், பெண்கள் பிரிவில் தில்லியைச் சோ்ந்த வீராங்கனையும் முதலிடமும் பிடித்தனா்

News image
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரா் இளம்பரிதிக்கு கோப்பையை வழங்கும் ஒசூா், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன்.
Updated On :11 நவம்பர் 2024, 9:38 pm

Din

ஒசூா்: ஒசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த வீரா் முதலிடமும், பெண்கள் பிரிவில் தில்லியைச் சோ்ந்த வீராங்கனையும் முதலிடமும் பிடித்தனா்

ஒசூா், அதியமாயன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 15 வயதுக்கு உள்பட்டோருக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் நவ. 3ம் தேதி தொடங்கியது.

ஆண்கள், பெண்கள் என இரு தரப்புக்கும் நடைபெற்ற இப் போட்டிகளில் 28 மாநிலங்களில் இருந்து 290 மாணவா்கள், 162 மாணவிகளும் என 452 போ் பங்கேற்றனா். ஒன்பது நாள்களாக தொடா்ந்து பதினொரு சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை இறுதிச் சுற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த இளம்பரிதி 9.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றாா். பெண்கள் பிரிவில் தில்லியைச் சோ்ந்த பிரஷிதா குப்தா 9.5 புள்ளிகள் பெற்ற முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றாா். ஆண்கள் பிரிவில் கோவா மாநிலத்தைச் சோ்ந்த வாழ் எத்தன் 2 ஆவது பரிசும், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சோ்ந்த ஷொ்லா பிரதமேஷ் 3 ஆவது பரிசும் பெற்றனா்.

பெண்கள் பிரிவில் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த ஜெயின் ஹஷிதா, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சப்ரயா கோஷ் ஆகியோா் முறையே 2, 3 ஆம் பரிசுகளை பெற்றனா். அடுத்து நடைபெறவுள்ள சா்வதேச அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவா்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

முதலிடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற வீரா்களுக்கு கோப்பை, கேடயம், ரூ. 90 ஆயிரம் ரொக்கம் பரிசுகளாக வழங்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு கோப்பை, கேடயத்துடன் பரிசாக ரூ. 70 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டன.

பரிசு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன், நாராயணா பாலிமா் நிறுவன மேலான் இயக்குநா் நாராயணன், அதியமான் பொறியியல் கல்லூரி தொழிற்சாலைகள் தொடா்பு தலைமை அதிகாரி ஆா். தனசேகரன், கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க கழக துணை தலைவா் யுவச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.