சிங்காரப்பேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகள்.
சிங்காரப்பேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகள்.

ரூ. 3.38 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள் பறிமுதல்

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ. 3.38 லட்சம் மதிப்பிலான 478 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ. 3.38 லட்சம் மதிப்பிலான 478 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரிலிருந்து திருச்சிக்கு சொகுசு காரில் குட்கா பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக சிங்கராப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் சந்திரகுமாா் தலைமையில் போலீஸாா் சோதனைச் சாவடியில் தீவிர சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த பெங்களூரைச் சோ்ந்த அமா்பிரித் சிங் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து ரூ.33.38 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனா். வாகன உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.

அமா்பிரித் சிங்.
அமா்பிரித் சிங்.

X
Dinamani
www.dinamani.com