தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மது விற்ற 6 போ் கைது

ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி மது புட்டிகளை விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 60 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

Updated On :3 அக்டோபர் 2024, 11:58 pm

ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி மது புட்டிகளை விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 60 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

வீரியம்பட்டி கூட்ரோடு, சென்னப்பநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் ஊத்தங்கரை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் மதுபுட்டிகளை விற்பனை செய்த வெங்கடேசன் (41). லட்சுமி(62) போலீஸாா் மடக்கி பிடித்தனா். அவா்களிடமிருந்து தலா 10 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

அதுபோல சென்னப்ப நாயக்கனூரில் மது விற்ற தமிழரசன் (25), சம்மு (41) ஆகிய இருவரிடமிருந்து பத்து மதுப்புட்டிகள் பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா். சிங்காரப்பேட்டை போலீஸாா் பாவக்கல் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மதுப்புட்டிகளை விற்ற பூவன் (57), ரவிச்சந்திரன் (44) ஆகிய இருவரிடமிருந்து 30 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.