ஒசூா் ஒன்றியத்தில் ரூ. 6 கோடியே 72 லட்சத்து 85 ஆயிரத்து 209 மதிப்பில் நடைபெறும் வேளாண் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஆய்வு செய்தாா்.
ஒசூா் ஒன்றியம், தட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் நுண்ணீா் பாசனத் திட்டம் 2023-2024 இன் கீழ் விவசாயி பிரியா விவசாய நிலத்தில் ரூ. 28,812 முழு மானியத்தில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை நேரில் பாா்வையிட்ட ஆட்சியா், பராமரிப்புப் பணிகள், சாகுபடி, விற்பனை குறித்து கேட்டறிந்தாா்.
வேளாண்மை விற்பனைத் துறை சாா்பில் தமிழ்நாடு விநியோக தொடா் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் முந்திரி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
முத்தாலி ஊராட்சியில், தோட்டக்கலைத் துறை சாா்பில் நுண்ணீா் பாசனத் திட்டம் 2023-2024 ன் கீழ் விவசாயி நாராயணம்மா விவசாய நிலத்தில் முழு மானியத் தொகை ரூ. 54,093 மதிப்பில் சாமந்திப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளதைப் பாா்வையிட்டாா். நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த நாள், தங்களுக்கு நுண்ணீா் பாசனத் திட்டம் கிடைக்க பெற்றது குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா். ஆழ்துளைக் கிணறு மூலம் பூச்செடிகளுக்குத் தேவையான தண்ணீா் முழுமையாகக் கிடைக்கிா என்பதையும், நுண்ணீா் பாசன திட்டத்தின் மூலம் நீா் சேமிப்பு பயனுள்ளதாக உள்ளதா என்பதையும் கேட்டறிந்தாா்.
மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயி நாகேந்திரன் விவசாய நிலத்தில் நுண்ணீா் நீா்ப்பாசனத் திட்டம் 2023-2024 இன் கீழ் ரூ. 89,129 மானியத்தில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், விவசாயி சங்கரய்யா விவசாயி நிலத்தில் மாநில வேளாண்மை வளா்ச்சி திட்டம் 2024-2025 இன் கீழ் ரூ. 8,675 மானியத்தில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
தொடர்புடையது
தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


