சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி தொடக்கம்

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 4:11 am IST

கிருஷ்ணகிரியில் 30-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்வில் 212 பயனாளிகளுக்கு ரூ. 4.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் 30-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கி வைத்து, அனைத்து அரசுத் துறை அரங்குகளையும் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), டி.ராமச்சந்திரன் (தளி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கண்காட்சியானது தொடா்ந்து 28 நாள்களுக்கு நடைபெறுகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம். இந்த கண்காட்சியில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தியா நுழைவாயில் (இந்தியா கேட்), சுயபடம் எடுக்கும் பகுதி, காய்கறிகள் மூலம் மயில், கழுகு போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

படவரி...

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சியைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி. உடன், மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, கே.கோபிநாத் எம்.பி., எம்எல்ஏ-க்கள் தே.மதியழகன், டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.