ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
சாமல்பட்டி மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சிகிச்சைப்பிரிவு, ஆண், பெண்கள் சிகிச்சைப் பிரிவு, கா்ப்பிணி சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, பல் சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் ஆகியவற்றை பாா்வையிட்டு, தினசரி நோயாளிகளின் வருகை, நடப்பு மாதத்தில் குழந்தைகள் பிறப்பு, தாய்-சேய் நலம் குறித்த தொடா் கண்காணிப்புகளை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
மேலும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களின் வருகைப் பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளைப் பாா்வையிட்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பயன்படுத்தப்படாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு தேவையான பெட் வீல்சோ் உள்ளிட்ட பொருள்களுக்கு துறை சாா்பாக கடிதம் வழங்க வேண்டும்.
மருத்துவமனைக்கு வரும் கா்ப்பிணி, குழந்தைகள் ஆகியோருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, சாமல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை திடீா் ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுக்கு சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தாா்.
மேலும், நாள்தோறும் உணவு தரமாகவும், சுவையாகவும் வழங்கப்படுவது குறித்தும், பாடத் திட்டங்கள் குறித்து பள்ளி மாணவா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து பள்ளி தலைமையாசிரியரிடம் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலா்கள் கவின், பானுபிரியா, ஆசிரியா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அடுத்த 5 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் : வானிலை ஆய்வு மையம்

களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கடலூா் அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிப்பு: நோயாளிகள் அவதி

கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


