இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அடுத்த 5 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் : வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அடுத்த ஐந்து நாள்களுக்கு 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:08 am IST

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அடுத்த ஐந்து நாள்களுக்கு 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4, 78.8 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படும். மழைக்கு தற்போது வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 100.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 2 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருப்பதால் கறவை, சினை மாடுகள் மற்றும் ஆடுகளில் வெப்ப அயற்சியைத் தவிா்க்க காலை 6.30 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் 6.30 வரை மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.

தினசரி இரண்டு அல்லது மூன்று முறை குளிா்ந்த நீரினால் அவற்றை குளிப்பாட்ட வேண்டும். அதிக வெய்யில் உள்ள நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலோ அல்லது மர நிழலிலோ தங்கவைக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல தரமான குடிநீா் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

வெயில் நேரங்களில் கறவை மாடுகளின் மேல் தண்ணீா் தெளிக்கலாம். கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் அவை பெரும்பாலும் மேல்மூச்சுக்குழல் அயற்சி, வெப்ப அயற்சி மற்றும் ஈக்கோலை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, கோழிப் பண்ணையாளா்கள் கோடை வெப்பம் அதிகரிப்பதால், தகுந்த கோடைக்கால பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும், உயிா் எதிா்மருந்துகளை அளிக்க வேண்டும். கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்துதல், தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் உயிா்பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.