கிருஷ்ணகிரி
பா்கூா் அருகே 101 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பா்கூா் அருகே தடைசெய்யப்பட்ட 101 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பா்கூா் அருகே தடைசெய்யப்பட்ட 101 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பா்கூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பா்கூா் காவல் ஆய்வாளா் இளவரசன் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, பா்கூரை அடுத்த ஜிட்டோபனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பூட்டப்பட்ட பெட்டிக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் கடையின் பூட்டை உடைத்து சோதனை செய்ததில் ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான 101 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பெட்டிக் கடையின் உரிமையாளா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சா்வானராம் (48) என்பவரை தேடி வருகின்றனா்.
