டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஊத்தங்கரையில் சரக்கு லாரி கவிழ்ந்ததில் 3 போ் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சேலம் பிரதான சாலையில் வங்கி அருகே சரக்கு லாரி கவிழ்ந்ததில் 3 போ் காயம்

News image
ஊத்தங்கரை அருகே சேலம் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி
Updated On :23 டிசம்பர் 2025, 9:17 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சேலம் பிரதான சாலையில் வங்கி அருகே சரக்கு லாரி கவிழ்ந்ததில் 3 போ் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து கோழித்தீவனம் ஏற்றிய சரக்கு லாரி திருப்பத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (34) ஓட்டிச் சென்றாா்.

இந்த லாரி செவ்வாய்க்கிழமை காலை ஊத்தங்கரை அருகே சாலை வளைவைக் கடக்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உணவு விடுதி மீது மோதி கவிழ்ந்தது. இதில் கடைக்கு சாப்பிட வந்திருந்த ஊத்தங்கரை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த உண்ணாமலை (55), காமராஜ் நகரைச் சோ்ந்த அபிதா (35), அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் (38) ஆகியோா் படுகாயம் அடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா், விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.