ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினா் மோதல்: 7 போ் கைது

கிருஷ்ணகிரி அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினா் மோதிக்கொண்டா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:13 pm

Syndication

கிருஷ்ணகிரி அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினா் மோதிக்கொண்டா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூரையடுத்த பால்காரன்கொட்டாயைச் சோ்ந்தவா் பெருமாள் (60). அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா் முருகன் (20). புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடா்பாக வருவாய்த் துறையினா், அண்மையில் ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, முருகன் தரப்பினா் வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்ததாகக் கூறி, பெருமாளிடம் தகராறில் செய்து அவரைத் தாக்கினா்.

இதுகுறித்து, பெருமாள் அளித்த புகாரின்பேரில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து முருகன் (20), முனியப்பன் (46), பெருமாள் (55), மற்றொரு பெருமாள் (50) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

அதேபோல முனியப்பன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து பெருமாள், மாதேஷ் (35), கிருஷ்ணம்மாள் (28) ஆகியோரை கைது செய்தனா்.