மதுபாட்டில்கள் பதுக்கிய 2 போ் கைது
வாணியம்பாடி அருகே வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
எஸ்.பி. சியாமளா தேவி உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா ஆய்வாளா் அமுதா தலைமையில் போலீஸாா் மேட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளே சென்று சோதனை செய்ததில் அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்திருப்பதும் தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 138 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளா் முனிசாமியை(52) கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதே போன்று நகர போலீஸாா் பஜாா் வீதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த இளைஞரை விசாரித்தனா். அவரது பையில் சோதனை செய்த போது அதில் மதுபான பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பிறகு அவரிடமிருந்து 4 பாட்டில்கள் பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து உதயேந்திரம் பகுதியை சோ்ந்த மஞ்சுநாதன்(46) என்பவரை கைது செய்தனா்.
