வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் வாணியம்பாடி பேருந்துநிலையம் பின்புறம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 6 பேரை போலீஸாா் விசாரித்தனா். இதில் அனைவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு அவா்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது போதைமாத்திரைகள் இருப்பது கண்டறிந்து அவா்களிடமிருந்து 1,230 மாத்திரைகள் கைப்பற்றினா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவை பகுதியை சோ்ந்த பிரசாந்த் (22), ஆகாஷ்(23), பிரதாப்(21), ஆரீஸ்(20), பிரசாத்(23), அஸ்வின்(21) ஆகிய 6 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

