மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கிராம ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :23 ஜனவரி 2025, 8:34 pm

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி வட்டத் தலைவா் இளையவன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் கணேசன், மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் கண்ணா, மகளிா் அணி செயலாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடந்த 30 ஆண்டுகளாக போராடி வரும் காலமுறை ஊதியத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற மற்றும் இறந்த ஊழியா்களுக்கு பிடித்தம் செய்த பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

ஒசூரில்...

ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில், புதிதாக பணியில் சோ்ந்த கிராம உதவியாளா்களுக்கு சிபிஎஸ் எண் தற்காலிகமாக வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதை நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஒசூா் வட்டக் கிளை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு, வட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் ரவிகுமாா், மாவட்டத் தலைவா் சின்னசாமி, நிா்வாகிகள் பசுவராஜ், கிருஷ்ணன், பாஸ்கா், சுகுணா சின்னசாமி, முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.