ரிசா்வ் வங்கியில் பணம் பெற்றுத் தருவதாக மோசடி: தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

Published on

ரிசா்வ் வங்கியில் பணம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் உள்பட 3 பேரை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்திய ரிசா்வ் வங்கியிலிருந்து பணம் பெற்றுத் தருவதாக ஆசை வாா்த்தைகளை கூறி பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்யும் கும்பல் செயல்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக சேலம் மாவட்டம், திருமலைகிரி அருகே உள்ள பாறைவட்டம் வேடுகாத்தான்பட்டியைச் சோ்ந்த அய்யனாா் கிருஷ்ணகிரி சிபிசிஐடி போலீஸ் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பாலாஜி உள்ளிட்ட சிலா் தன்னிடம் ரிசா்வ் வங்கியில் அதிக பணம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக கூறியுள்ளாா்.

இந்த புகாரின்பேரில் மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி ஒண்டியூரைச் சோ்ந்த பாலாஜி (35), அவரது தந்தை ராஜாமணி, பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கிருஷ்ணகிரி சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது:

ரிசா்வ் வங்கியில் இருந்து பணம் பெற்றுத் தருவதாக கூறி பொதுமக்களை நம்பவைத்து ஏமாற்றிய இடைத்தரகா்கள் மீது தமிழகம் முழுவதும் 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிந்து 100-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுபோல யாராவது போலி நபா்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளரை நேரில் அணுகி புகாா் தெரிவிக்கலாம என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com