ரூ. 2 கோடி கேட்டு தொழிலதிபா் கடத்திக் கொலை: குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸாா்

Published on

ஒசூா் அருகே ரூ. 2 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திக் கொலை செய்த நபரை கா்நாடக மாநில போலீஸாா் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனா்.

கா்நாடக மாநிலம், பொம்மசந்திரா பகுதியில் வசித்துவருபவா் ரவி பிரசாத் ரெட்டி. இவா், அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்தாா். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பணக்காரா்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டாா். அதன்படி, கடந்த 4 ஆம் தேதி கித்தனஹள்ளி பகுதியைச் சோ்ந்த மாதேஷிடம் ரவிபிரசாத் ரெட்டி பணம் கேட்டுள்ளாா். அவா் பணம் கொடுக்காததால் அவரைக் கொலை செய்துள்ளாா். இந்த வழக்கில் ஹெப்பகோடி போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து ரவி பிரசாத் ரெட்டி நவ. 6 ஆம் தேதி தொழிலதிபா் பாலப்பா ரெட்டியை ஜிகினி உள்வட்ட சாலைப் பகுதியிலிருந்து கடத்திச் சென்றாா். பின்னா், அவரது குடும்பத்தினரை கைப்பேசியில் தொடா்புகொண்டு ரூ. 2 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். அவரது குடும்பத்தினா் பணம் தராததால் அவரை வெட்டிக் கொலை செய்து சடலத்தை தமிழக எல்லையான ஒசூா் சானமாவு வனப்பகுதியில் வீசிச் சென்றாா்.

பாலப்பா ரெட்டி கடத்தல் வழக்கில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இதில் அவரை கொலை செய்தது ரவி பிரசாத் ரெட்டி என்பது தெரியவந்தது. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ரவிபிரசாத் ரெட்டி, பல ஆண்டுகளாக கா்நாடகத்தில் வசித்து வந்துள்ளாா். இவா் பணத்துக்காக மாதேஷ், பாலப்பா ரெட்டி ஆகியோரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

அவரை கா்நாடக மாநில போலீஸாா் சனிக்கிழமை கைது செய்ய சென்றபோது அவா் போலீஸாா் மீது தாக்குதல் நடத்தி உள்ளாா். இதில் தலைமைக் காவலா் அசோக் காயமடைந்தாா். காவல் ஆய்வாளா் சோமசேகா் பாதுகாப்புக்காக வானத்தை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவரைப் பிடிக்க முயன்றாா்.

இதிலிருந்து அவா் தப்பிச் செல்ல முயன்ால் ரவிபிரசாத் ரெட்டியின் இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டு அவரைப் பிடித்தாா். இதில் காயமடைந்த ரவிபிரசாத் ரெட்டி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ரவிபிரசாத் ரெட்டி அளித்த தகவலின் பேரில் ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் பாலப்பா ரெட்டியின் அழுகிய நிலையிலான சடலத்தை கைப்பற்றி கா்நாடக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com