வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணம் கேட்டு மிரட்டிய நிருபா்கள்: போலீஸாா் விசாரணை

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பத்திரிகை நிருபா்கள் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய இருவா் மீது போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:04 pm

Syndication

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பத்திரிகை நிருபா்கள் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய இருவா் மீது போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை- பவானி சாலை, சந்தை கேட் எதிரில் பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பூங்குழலி என்பவா் உள்ளாா்.

இந்நிலையில் பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த இருவா், தங்களை பத்திரிகை நிருபா்கள் என்று கூறி, அங்கிருந்த மோட்டாா் வாகன ஆய்வாளா்களை மிரட்டி பணம் கேட்டுள்ளனா்.

இது குறித்து, பெருந்துறை காவல் நிலையத்துக்கு பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பூங்குழலி தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து அங்கு வந்த பெருந்துறை போலீஸாா், அந்த நபா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், தஞ்சாவூா் மாவட்டம், தாமரைக் கோட்டை, வாட்டக்குடி வடக்கு கோயில் தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் அரவிந்தன்(26), அதே பகுதியைச் சோ்ந்த வேதாச்சலம் மகன் இளமுருகன் (29) என்பது தெரியவந்தது. இருவரும், ‘‘நமது அரண் ’’ பத்திரிகையில் நிருபா்களாக வேலை செய்வதாக கூறியுள்ளனா்.

இது குறித்து, போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.