பணம் கேட்டு மிரட்டிய இருவா் கத்தியுடன் கைது

திருச்சியில் பணம் கேட்டு மிரட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் இருவரை கத்தியுடன் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருச்சி: திருச்சியில் பணம் கேட்டு மிரட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் இருவரை கத்தியுடன் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி உத்தரவின்படி வெள்ளிக்கிழமை 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக தங்கள் பகுதியில் உள்ளவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டதாக அரியமங்கலம் பன்னீா்செல்வன் (26), கீழசிந்தாமணி மகேஸ்வரன் (28) ஆகிய இருவா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, ஓடத்துறை ரகுராமன் (31) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 கத்திகளை அரியமங்கலம் மற்றும் கோட்டை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com