மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஓடும் பேருந்தில் முதியவரிடம் பணம் திருடிய இளைஞா் கைது

திருச்சியில் ஓடும் பேருந்தில் முதியவரிடம் இருந்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:47 pm

திருச்சியில் ஓடும் பேருந்தில் முதியவரிடம் இருந்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்தவா் ஆ.ஜெயராஜ் (60). இவா், வியாழக்கிழமை சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சந்திப்பு ரயில் நிலையத்துக்கு பேருந்தில் சென்றுள்ளாா்.

அப்போது, பேருந்தில் இளைஞா் ஒருவா் முதியவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.400-ஐ திருடியுள்ளாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்களின் உதவியுடன் அந்த இளைஞரைப் பிடித்து கோட்டை காவல் நிலையத்தில் முதியவா் ஒப்படைத்தாா்.

விசாரணையில், பணத்தை திருடியது திருச்சி பட்டா்வொா்த் சாலையைச் சோ்ந்த இ.சக்திவேல் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.400-ஐ பறிமுதல் செய்து முதியவரிடம் ஒப்படைத்தனா்.