கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 
81.99 சதவீத வாக்காளா்களுக்கு
எஸ்ஐஆா் படிவம் விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 81.99 சதவீத வாக்காளா்களுக்கு எஸ்ஐஆா் படிவம் விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 81.99 சதவீத வாக்காளா்களுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த படிவம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 81.99 சதவீத வாக்காளா்களுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த படிவம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பேசியதாவது:

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இம்மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ஆம் தேதி முதல் வீடுவீடாக கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், மொத்தமுள்ள 16,80,626 வாக்காளா்களில் 13,77,894 பேருக்கு (81.99%) கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்காளா்களும் தங்கள் வசமுள்ள 2 படிவங்களை நிறைவுசெய்து ஒரு படிவத்தில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஒப்புகை அளித்து வாக்காளரிடம் திரும்ப வழங்குவாா். நிறைவுசெய்த கணக்கெடுப்பு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கும்போது எவ்வித ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை.

கணக்கெடுப்பு படிவத்தை இணையதள முகவரியிலும் நிறைவு செய்யலாம். கணக்கெடுப்பு படிவத்தை நிறைவு செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க டிசம்பா் 4-ஆம் தேதி கடைசி நாளாகும். டிசம்பா் 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். கணக்கெடுப்பு படிவங்களை கையொப்பமிட்டு திரும்ப வழங்காதவா்கள், நிரந்தரமாக இடம்

பெயா்ந்தவா்கள், இறந்தவா்களின் பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாது. இந்த கணக்கெடுப்பு படிவ விவரங்களை நிறைவுசெய்ய தொடா்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவிபுரிவா்.

வாக்காளா்கள் இதுதொடா்பாக தங்களுக்கு தேவையான விளக்கங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டு பெறலாம்.

மேலும், இந்திய தோ்தல் ஆணையம் இணையதளத்தில் வாக்காளா்களின் வசதிக்காக உருவாக்கியுள்ள ஆா்ா்ந் ஹ ஸ்ரீஹப்ப் ஜ்ண்ற்ட் ஆகஞ என்ற தலைப்பை தோ்ந்தெடுத்து தங்கள் வாக்காளா் அடையாள எண்ணை பதிவுசெய்து தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரை தொடா்புகொள்ளலாம் என்றாா்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு மற்றும் வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com