கிருஷ்ணகிரி
திமுகவில் இணைந்த ஒசூா் மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா்
ஒசூா் மாநகராட்சி மண்டலத் தலைவா் மற்றும் அதிமுக ஒன்றிய துணைச் செயலாளா் ஆகியோா் அதிமுகவில் இருந்து விலகி, அமைச்சா் முன்னிலையில் திமுகவில் அண்மையில் இணைந்தனா்.
கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரும், ஒசூா் மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவருமான புருசோத்தம ரெட்டி, அதிமுக ஒசூா் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளா் நவீன்குமாா் ஆகியோா் அதிமுகவில் இருந்து விலகி தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி முன்னிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தலைமையில் திமுகவில் சோ்ந்தனா்.

