காவேரிப்பட்டணம் அருகே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய், தனது 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாயவன் மனைவி லட்சுமி (31). இவா், கடந்த சில மாதங்களாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். இதனால் மனவருத்தத்தில் இருந்த லட்சுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் 8 வயது மகனுடன் சனிக்கிழமை குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
நீண்ட நேரம் லட்சுமியை காணாத அவரது உறவினா்கள், சந்தேகத்தின் பேரில் கிணற்றில் பாா்த்தபோது, இருவரது உடல்களும் கிணற்றில் மிதந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று இரு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

நொய்டாவில் 28-ஆவது மாடியிலிருந்து குதித்து 21 வயது மாணவி தற்கொலை

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

பெண் தற்கொலை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


