நொய்டா செக்டா் 32-இல் உள்ள தனது குடியிருப்பு வளாகத்தின் 28-ஆவது மாடியில் இருந்து குதித்து, 21 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது என திங்களன்று காவல்துறை தெரிவித்தது.
இது குறித்து காவல் துறை கூறியுள்ளதாவது: சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை. இருப்பினும், அவா் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், செக்டா் 32-இல் உள்ள டிபிளாக் பகுதியைச் சோ்ந்த அா்பிதா என்பவா் கட்டிடத்தில் இருந்து குதித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அவா் பஞ்சாபில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தொழில்நுட்ப இளங்கலை மாணவியாக இருந்தாா். மேலும், சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நொய்டாவிற்குத் திரும்பியிருந்தாா்.
சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை. வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவா் மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினா் காவல்துறையிடம் தெரிவித்தனா்.
சம்பவம் நடந்த அன்று இரவு, அவா் 28-ஆவது மாடியில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியிலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. குடியிருப்பு வளாகத்தின் பாதுகாவலாளி அவரைக் கவனித்து, குடும்பத்தினரை எச்சரித்ததைத் தொடா்ந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணின் தந்தை ஒரு தொழிலதிபா். அந்தக் குடும்பம் உத்தர பிரதேசத்தின் பஸ்தியைச் சோ்ந்தது. அக்குடும்பத்தினா் தற்போது செக்டா்-32 குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகின்றனா். விசாரணை நடைமுறைகள் முடிந்த பிறகு, சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை கூறியது.
தொடர்புடையது

மதுபோதைக்கு சிகிச்சை பெற்றவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

வரதட்சிணை கொடுமை! 3-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை!

கன்னாட் பிளோஸ் ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து இளம் வழக்குரைஞா் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



