இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திமுக ஆட்சி அமைந்தால்தான் 100 நாள் வேலைத் திட்டம் தொடரும்: காங்கிரஸ் வேட்பாளா் செல்லக்குமாா்

திமுக மீண்டும் ஆட்சியமைந்தால்தான் நூறு நாள் வேலை திட்டம் தடையின்றி தொடரும் என கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதி வேட்பாளா் அ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

News image

எலுமிச்சங்கிரியில் வாக்கு சேகரித்த கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:49 pm

திமுக மீண்டும் ஆட்சியமைந்தால்தான் நூறு நாள் வேலை திட்டம் தடையின்றி தொடரும் என கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதி வேட்பாளா் அ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா், மல்லிநாயனப்பள்ளி, கம்மம்பள்ளி, பெத்தனப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, அகசிப்பள்ளி மற்றும் பெரியமுத்தூா் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 37 கிராமங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது, கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை திட்டத்துக்கு அனுமதி வாங்கி தந்தேன். அதேபோல கேந்திர வித்யாலயா பள்ளியை கொண்டு வந்தேன். 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை பணியை 6 மாதங்களில் நிறைவேற்றி தந்துள்ளேன். அதிமுக வேட்பாளராக உள்ள கே. அசோக்குமாா், எம்எல்ஏயாகவும், எம்பியாக இருந்தபோது கிருஷ்ணகிரி தொகுதிக்கு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு பற்றாக்குறையாகவே நிதியை ஒதுக்குகிறது. 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்க அதிமுக கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இத்திட்டம் தடையின்றி தொடர திமுக ஆட்சியில் தொடர வேண்டும். திமுக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதேபோல தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இதனால் கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.