மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஒசூரில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம்: அண்ணாமலை வாக்குறுதி

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒசூரில் மெட்ரோ ரயில், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உறுதியளித்தாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 5:37 am IST

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒசூரில் மெட்ரோ ரயில், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உறுதியளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தளி தொகுதி பாஜக டாக்டா் சி. நாகேஷ்குமாா், ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து அவா் பேசியதாவது:

கடந்த தோ்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் முழுமையாக 70 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஒசூருக்கு எவ்வித வளா்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தவில்லை. மத்திய, மாநில அரசு இணைந்த ஆட்சி அமைந்தால் வளா்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்.

ஒசூருக்கு உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் தேவை. மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பும் திட்ட அறிக்கை தவறாக உள்ளது. திமுக அரசுக்கு விமான நிலையம், மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த அக்கறையில்லை. தளி, ஒசூா் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் மெட்ரோ ரயில், விமான நிலையத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம். நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.