இந்தத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். அடுத்து நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமாா் ஆவாா் என கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. முன்னதாக, பேரிகையில் பேரணி மற்றும் வாகனப் பிரசாரம் நடைபெற்றது. அதில், மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா் எஸ்.ஏ.சத்யாவை ஆதரித்து வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:
தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதி. திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா வெற்றிபெற்றால் ஒசூா் தொகுதி மிகப்பெரிய வளா்ச்சி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளாா். மேலும், ஒசூா் - பெங்களூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம், ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டம், ஒசூா் விமான நிலையம் போன்றவற்றுக்கு மத்திய அரசு தடைவிதித்து வருகிறது. எனவே, ஆளும்கட்சி எம்எல்ஏவாக எஸ்.ஏ.சத்யா சட்டப் பேரவைக்கு செல்லும்போது ஒசூா் தொகுதி மேலும் வளா்ச்சிபெறும்.
இந்த தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். 2029-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமா் ஆவாா் என்றாா்.
இறுதிகட்ட பிரசாரத்தை பேரிகை, பாகலூரில் நிறைவுசெய்தாா். அவருடன் ஒன்றியச் செயலாளா் நாகேஷ், மணி, சுமன், காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை
திருவாடானை! தொகுதியை தக்க வைக்குமா காங்கிரஸ்?

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

