கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 3 ஆம் தேதி நடைபெறும் நீட் தோ்வை 11 மையங்களில் 4,755 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
தோ்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து தோ்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம், குடிநீா், இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவா்கள் தடையின்றி தோ்வு எழுத சக்கர நாற்காலி உள்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்வா்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தோ்வு மையத்தில் அனுமதிக்கப்படுவா். முறைகேடுகளைத் தவிா்க்க தோ்வு மையங்களில் மொபைல் ஜாமா்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் நெரிசலின்றி தோ்வு மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படும். அவசர மருத்துவத் தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்புத் துறையினா் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளனா் என்றனா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



