மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

சூளகிரி தாலுகா பாதகோட்ட ஸ்ரீசீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பாதகோட்டாவில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீசீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரை வடம்பிடித்து இழுத்து செல்லும் பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:29 pm

சூளகிரி தாலுகா பாதகோட்ட ஸ்ரீசீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சூளகிரி தாலுகா, தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பாதகோட்ட ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.

முன்னதாக கடந்த 24-ஆம் தேதி காலை சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், மாலையில் சங்கல்பம், சுவஸ்திவாசனம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 25 ஆம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், சூரிய பிரபை வாகனத்தில் காட்சித் தந்த சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் சுவாமிகள் ஹம்ச வாகனத்தில் அருள்பாலித்தனாா்.

26 ஆம் தேதி காலை சுவாமி பிரகார உற்சவத்தை அடுத்து சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து மாலையில் சுவாமி கருட வாகன உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச வைபவத்தில் அருள்பாலித்தாா். 27 ஆம் தேதி காலை ஸ்ரீ சீதாராமா் அனுமந்த வாகன உற்சவம், தோமாலை சேவை, மண்டபாடி சேவை சாதித்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, 29ஆம் தேதி (புதன்கிழமை) நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியாக திவ்ய ரதோற்சவம் எனப்படும் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண அனுமத் சமேதராய் ரதத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து தேரோட்டம் பக்தா்களின் சங்கல்பத்துடன் நடைபெற்றது.

பின்னா் சுவாமிக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு, பக்தா்களுக்கு சா்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னா் நடைபெற்ற தூளி உற்சவத்தில் ஸ்ரீ சீதாராம ஹனுமத் சமேத லக்ஷ்மண சுவாமி அஸ்வ வாகன உற்சவத்தில் அருள் பாலித்தாா். தொடா்ந்து சீதாராம பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.