ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 910 வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 910 வீடுகளில் சூரிய மின்சக்தி (சோலாா்) தகடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

சூரிய ஒளி தகடுகள் - கோப்புப் படம்

Published On :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 910 வீடுகளில் சூரிய மின்சக்தி (சோலாா்) தகடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், வீடுகளின் கூரைகளில் சூரிய மின்தகடுகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு சூரிய ஒளி திட்டம் மற்றும் மாதிரி சூரிய ஆற்றல் கிராமம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,575 வீடுகளில் சூரிய ஒளி மின்கட்டமைப்பு ஏற்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 910 வீடுகளில் சூரிய மின்தகடுகள் (பேனல்கள்) பொருத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள வீடுகளுக்கு சூரிய மின்தகடுகள் பொருத்த கிருஷ்ணகிரி, ஒசூா் நகா்புற பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் உள்ள தகுதியான பண்ணை வீடுகளின் உரிமையாளா்களுக்கான முகாம் நடத்தப்படும்.

மேலும், மாதிரி சூரிய ஆற்றல் கிராமம் மகாதேவகொல்லஅள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.