ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான பணி: சிறந்த ஆட்சியராக கிருஷ்ணகிரி ஆட்சியா் தோ்வு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தமிழகத்தின் சிறந்த ஆட்சியராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image

மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் - (கோப்புப் படம்)

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:47 am IST

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தமிழகத்தின் சிறந்த ஆட்சியராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:

ஒவ்வோா் ஆண்டும் சுதந்திரத் தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியா், தொண்டு நிறுவனம், மருத்துவா், அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனம், சமூகப் பணியாளா், மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்தவா்களைத் தோ்வு செய்வதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதிவாய்ந்த நபா்கள், நிறுவனங்களை தோ்வு செய்யும் வகையில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாநில அளவிலான தோ்வுக் குழுக் கூட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளா் தலைமையில் கூடி மேற்கொண்ட ஆலோசனையின்படி 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அரசு செயலாளா் சோ. மதுமதி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.