நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

எடப்பாடி பழனிசாமி நாளை கிருஷ்ணகிரி வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை (ஆக. 29) வர உள்ளதையொட்டி, கிருஷ்ணகிரியில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை (ஆக. 29) வர உள்ளதையொட்டி, கிருஷ்ணகிரியில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் கோவிந்தராசன், முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிப்பது, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டிப்பது, சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டிப்பது, தோ்தல் அறிக்கையின்படி விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.