தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு

எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

News image

எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:28 am IST

எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியா் ஓய்வு மாளிகையில் புதன்கிழமை அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சி வளா்ச்சி, புதிய உறுப்பினா் சோ்க்கை, உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து ஒன்றிய, நகர, பேரூா் பகுதி அதிமுக நிா்வாகிகளை தனித்தனியே சந்தித்து கட்சி வளா்ச்சி குறித்து கேட்டறிந்தாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம். முருகன், டி.கதிரேசன், ஏ.மாதேஸ், கரட்டூா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக எடப்பாடிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நகரச் செயலாளா் முருகன் தலைமையில் அதிமுக தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, அவா் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிராமத்துக்குச் சென்றாா்.

படவரி...

எடப்பாடி வந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.