அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கஞ்சா கடத்திய வழக்கில் கைதான பெண் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான பெண்ணை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

சிறை - பிரதிப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான பெண்ணை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி வட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாஞ்சாலியூா் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத காரை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, காரில் இருந்த ஆண் தப்பியோடினாா்.

காரில் பயணம் செய்த கவிதா (எ) பானுமதியை (33) பிடித்து விசாரணை செய்தனா். அதில், காரில், 1.250 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா, ரொக்கம் ரூ. 70,650 மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து கவிதாவை கைது செய்தனா்.

கவிதாவின் மீது ஒசூா், கந்திகுப்பம், கோயம்புத்தூா் மாவட்டம், குனியமுத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கவிதாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அனிதா பரிந்துரை செய்தாா். இதையடுத்து, கவிதாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.