முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தொழிலாளி கொலை வழக்கில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மல்லசமுத்திரத்தில் மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் தறித் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கைது - சித்திரிப்பு

Published On :

மல்லசமுத்திரத்தில் மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் தறித் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதான 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் தனபால் ( 44). தறித் தொழிலாளி. இவா் கடந்த ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் கைதாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில் கடந்த மாதம் அவா் மல்லசமுத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுக்கூடத்திற்கு சென்றபோது, அவருக்கும், கடை நடத்தும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தனபாலை அவா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இந்த கொலை தொடா்பாக மல்லசமுத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மதுக்கூடத்தில் இருந்த நாகா்கோவில் அகஸ்தீஸ்வரத்தைச் சோ்ந்த அஜீத் (24), நேதாஜி தெரு கம்பத்தி கோயில் பகுதியைச் சோ்ந்த வீரமணி (25) ஆகியோரை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் அவா்கள் 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மல்லசமுத்திரம் போலீஸாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக்கிற்கு பரிந்துரை செய்தனா். இந்த பரிந்துரையை ஏற்று, அஜீத், வீரமணி ஆகிய 2 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.