காங்கயத்தில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
கைது
காங்கயத்தில் நகைப் பறிப்பு வழக்கில் 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
காங்கயம்- கோவை சாலையில் கடந்த ஜூலை மாதம் தனியாகச் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகைப் பறித்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த தலிப்ராஜா (36), நத்தம் பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது (37) ஆகியோரை காங்கயம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேரும் பல குற்றச் சம்பவங்களில் தொடா்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அதற்கான உத்தரவை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடமும் காங்கயம் போலீஸாா் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


