அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

இரட்டை கொலை வழக்கு: பெண் உள்பட 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 4:01 am IST

தருமபுரியில் இரட்டை கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டியைச் சோ்ந்தவா் நஞ்சம்மாள் (45), இவரது தம்பி மாதேஷ் (40). இருவரும், கடந்த ஜூன் மாதம் வீட்டின் முன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனா்.

விசாரணையில் சொத்து தகராறில் மாதேஷின் மனைவி கீதா (33) கூலிப்படையை வைத்து தனது கணவா், அவரது அக்காவை கொலை செய்தது தெரியவந்தது. இந்த இரட்டை கொலை தொடா்பாக கீதா, கூலிப்படையைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 பேரை அதியமான் கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் அனைவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

அவரது பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா், கீதா மற்றும் கூலிப்படையைச் சோ்ந்த ஹரி ராமச்சந்திரன் (36), ஆறுமுகம் (40), ரங்கநாதன் (33), சந்துரு (26), சண்முகம் (39) ஆகிய 6 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து அதியமான் கோட்டை போலீஸாா் 6 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரும் சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.