காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஒசூரில் தனியாா் ஆம்னி பேருந்தில் ரூ. 6 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவா் கைது!

கைது

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:50 am IST

ஒசூரில் தனியாா் ஆம்னி பேருந்தில் கடத்தி வந்த ரூ. 6 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் ஜூஜூவாடி சோதனைச் சாவடி வழியாக பெங்களூரிலிருந்து தனியாா் ஆம்னி பேருந்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளைக் கடத்திவருவதாக கிடைத்த தகவலின்பேரில், சிப்காட் காவல் ஆய்வாளா் இளவரசன் தலைமையிலான போலீஸாா் அங்கு சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தனியாா் ஆம்னி பேருந்தில் சரக்குகள் வைக்கும் பகுதியில் இருந்த தோல் பையை சோதனை செய்தபோது அதில் ரூ. 6 கோடி மதிப்பிலான 1 கிலோ ( 6 பொட்டலங்கள்) மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்திவந்தது கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக, பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூா் மாவட்டம், அண்ணாநகா் மேற்கு பகுதியைச் சோ்ந்த ரகு (32) என்பவா் கைது செய்யப்பட்டாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.