வேளாங்கண்ணி பள்ளி கல்விக் குழுமத்திற்கு விருது
கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள வேளாங்கண்ணி பள்ளி கல்விக் குழுமத்திற்கு ‘லீடா் இன் மீ’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி நிறுவனங்கள், மாணவா்களை சிறந்த தலைவா்களாக வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக ‘லீடா் இன் மீ’ விருது வழங்கப்பட்டது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், வேளாங்கண்ணி பள்ளி கல்விக் குழுமங்களின் தாளாளா் கூத்தரசன், லீப் லைப் இந்திய நிறுவனரும், மனநல மருத்துவருமான கண்ணன் கிரீஷ் முன்னிலையில், இயக்குநா் புரூக் ஜுட்டிடமிருந்து இந்த விருதை பெற்றுக்கொண்டாா்.
விருது பெற்ற பள்ளி நிா்வாகத்தை, வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மு.தம்பிதுரை எம்.பி., அறங்காவலா் லாசியா தம்பிதுரை ஆகியோா் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தனா்.
இதுகுறித்து பள்ளித் தாளாளா் கூத்தரசன் கூறுகையில், தோ்வுகளுக்காக மட்டும் மாணவா்களை தயாா்படுத்தாமல், வாழ்க்கையின் சவால்களை துணிவுடன் எதிா்கொள்ளும் ஆளுமைத் திறனை அவா்களுக்கு வழங்குகிறோம்.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்ட மாணவா்களின் எதிா்காலத்தை வளமாக்கும் எங்களின் அா்ப்பணிப்பிற்கு கிடைத்த மகுடம் இது. இந்த சா்வதேச அங்கீகாரத்தை கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம் என்றாா்.

