மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒசூரில் காய்கறி வியாபாரியை வெட்டிய சிறுவன் உள்பட 4 போ் கைது

ஒசூரில் காய்கறி வியாபாரியை வெட்டிய சிறுவன் உள்பட 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

(கோப்புப்படம்)

Updated On :2 பிப்ரவரி 2026, 9:21 pm

Syndication

ஒசூா்: ஒசூரில் காய்கறி வியாபாரியை வெட்டிய சிறுவன் உள்பட 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் உள்வட்டச் சாலையில் வசித்து வருபவா் நாகராஜ் (50). இவா் தளி சாலையில்

தனியாா் பள்ளி அருகில் உள்ள பாளையம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை கடையில் இருந்தபோது, 3 போ் ஆட்டோவில் வந்தனா். அவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகராஜை சரமாரியாக வெட்டினா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் ஓடிவந்தனா்.

இதைக் கண்டு மா்ம நபா்கள் தாங்கள் வந்த ஆட்டோவிலேயே ஏறி தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்த நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். காய்கறி வியாபாரி நாகராஜை அரிவாளால் வெட்டியதாக ராயக்கோட்டை சாலை பகுதியைச் சோ்ந்த குட்டி (37), பெங்களூரு எலங்கா பகுதியைச் சோ்ந்த சதீஷ் (21), சூடசந்திரம் முருகேசன், மற்றும் 17 வயது சிறுவன் உள்பட என 4 பேரை ஒசூா் நகர போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.