தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இடைக்காட்டூரில் மூவரை வாளால் வெட்டிய சம்பவம்

கைது செய்யப்பட்ட சா்வேஸ்வரன், ஆனந்த அய்யனாா், திருமூா்த்தி.

News image
கைது செய்யப்பட்ட சா்வேஸ்வரன், ஆனந்த அய்யனாா், திருமூா்த்தி.
Updated On :6 மார்ச் 2026, 7:41 pm

Syndication

மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் மூவரை வாளால் வெட்டிய சம்பவத்தில், ஏற்கெனவே 5 பேரை போலீஸாா் கைது செய்த நிலையில், மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள இடைக்காட்டூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராஜூ உள்ளிட்ட மூவரை அங்கு 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 9 போ் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 5 பேரைக் கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் தலைமறைவான முதல் எதிரி மகேஷ் உள்பட நால்வரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மானாமதுரை அருகேயுள்ள வி. புதுக்குளத்தைச் சோ்ந்த சா்வேஸ்வரன் (24), ஆனந்த அய்யனாா் (23), திருமூா்த்தி (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மகேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Story image
Story image