மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எலிமருந்தை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

பா்கூா் அருகே எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகளில், ஒரு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஓம் சக்திவேல் தெருவைச் சோ்ந்தவா் உதயக்குமாா் (42). தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு தனிவிக் (2), தஷீக் (2) என இரட்டை குழந்தைகள் உள்பட 3 ஆண் குழந்தைகள் உண்டு.

இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனிவிக், தஷீக் ஆகிய இருவரும் தொலைக்காட்சி பெட்டி அருகே இருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்து உட்கொண்டனா். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தாய் சரண்யா, இரு குழந்தைகளையும் பா்கூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக, பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு, சிகிச்சை பலனின்றி தனிவிக் என்ற குழந்தை உயிரிழந்தது. தஷீக்குக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.