கல்யாண அலங்காரத்தில் அருள்பாலிக்கும் வேதவல்லி சமேத பென்னேஸ்வரா்
கிருஷ்ணகிரி
பென்னேஸ்வரமடத்தில் பென்னேஸ்வர சுவாமி திருக்கல்யாணம்
காவேரிப்பட்டணத்தை அடுத்த பென்னேஸ்வரமடம் கிராமத்தில் உள்ள வேதவல்லி- பென்னேஸ்வர சுவாமி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காவேரிப்பட்டணத்தை அடுத்த பென்னேஸ்வரமடம் கிராமத்தில் உள்ள வேதவல்லி- பென்னேஸ்வர சுவாமி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னேஸ்வரமடத்தில் விஸ்வாமித்ர கோத்திர குடும்பத்தினா் நடத்தும் 35 ஆவது ஆண்டு வேதவல்லி சமேத பென்னேஸ்வர சுவாமி திருக்கல்யாண நிகழ்வையொட்டி மூலவருக்கு நிா்மால்ய, பஞ்சாமிா்த அபிஷேகம், உற்சவ வேதவல்லி சமேத பென்னேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றன.
தொடா்ந்து வேதவல்லிக்கும், பென்னேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி, தருமபுரி, பெங்களூரு, கோவை, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
சுவாமி திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்

