சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான புதன்கிழமை ராஜமன்னாா் அலங்காரத்தில் கல்பவிருட்ச வாகனத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.
திருப்பதியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் காலை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா் ராஜமன்னாா் அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் மாட வீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருளினாா்.
ஸ்நபன திருமஞ்சனம்:
பின்னா், உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்பு மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி சா்வபூபால வாகனத்தில் தன் உபய தேவியருடன் மாட வீதியில் வலம் வந்தாா்.
வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயில் மற்றும் மாடவீதிகள் வண்ண மின்விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

சப்தவா்ண புஷ்பயாகம்: 4 டன் மலா்களால் அபிஷேகம்

தீா்த்தவாரியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் நிறைவு

திருத்தேரில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி புறப்பாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


