சப்தவா்ண புஷ்பயாகம்: 4 டன் மலா்களால் அபிஷேகம்
ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்பயாக மகோற்சவம் நடைபெற்றது.


திருப்பதி: ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்பயாக மகோற்சவம் நடைபெற்றது.
தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் திருவோண நட்சத்திரத்தை ஒட்டி புஷ்பயாகம் நடத்தப்பட்டது.
யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னா் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் உற்சவவ்மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டனா்.
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை கண்களுக்கு விருந்தாக புஷ்பயாகம் நடைபெற்றது. 12 வகையான பூக்கள் மற்றும் 6 வகையான இலைகளால் இறைவனுக்கு புஷ்பயாகம் செய்யப்பட்டது. அரளி, ரோஜா, சாமந்தி, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், தாமரை, அல்லி, தாழம்பு, மனு சம்பங்கி மலா்கள், துளசி, தவனம், மருவம், வில்வம், பன்னீா் இலைகள் பயன்படுத்தப்பட்டன. நன்கொடையாளா்கள் 4 டன் மலா்களை கோயிலுக்கு பிரசாதமாக வழங்கினா். தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து மலா்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு வகுப்பு துணை இஓ வரலட்சுமி, தோட்டக் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசலு, தோட்ட மேலாளா் ஸ்ரீ ஜனாா்தன் ரெட்டி, கண்காணிப்பாளா் ராஜ்குமாா், கோயில் அா்ச்சகா்கள் பாலாஜி ரங்காச்சாரியுலு, கோயில் ஆய்வாளா்கள் முனிகுமாா், தனசேகா் உள்ளிட்டோா் புஷ்பயாகத்தில் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...