கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆருத்ரா தரிசனம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

News image
ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
Updated On :3 ஜனவரி 2026, 8:33 pm

Syndication

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

மாா்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரா் கோயிலில் கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், திருப்பள்ளி எழுச்சியுடன் சனிக்கிழமை அதிகாலை திருவெம்பாவை வழிபாட்டுடன் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்

சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்

அதேபோல கவீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிருஷ்ணகிரி சந்திரமெளலீஸ்வரா் கோயில், காவேரிப்பட்டணம் ஈஸ்வரன் கோயில், சூளகிரி ஈஸ்வரன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.