பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜசோழீசுவரா் கோயிலில் முதல்கால பூஜைகள் இரவு 7 மணிக்கும், இரண்டாம் கால பூஜைகள் இரவு 11 மணிக்கும், மூன்றாம் கால பூஜைகள் நள்ளிரவு 1 மணிக்கும், நான்காம் கால பூஜைகள் அதிகாலை 3 மணிக்கும் தொடங்கி நடைபெற்றது. நான்கு கால பூஜைகளில் ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலின் திருவாசகம் முற்றோதல் குழுவினா் பன்னிரு திருமுறைகள், சிவபுராண பாடல்களை முற்றோதல் செய்தனா். மேலும் குழந்தைகளின் பரத நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில், மறவாமதுரை ஆடகவள்ளி சமேத ஆடங்கநாதா் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா் கோயில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதா் கோயில் உள்ளிட்டசிவாலயங்களில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
விராலிமலை: சிவராத்திரி விழாவை முன்னிட்டு விராலிமலை பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் மூன்று கால பூஜைகள் நடைபெற்றன.
விராலிமலை அடுத்துள்ள விராலூரில் பூமீஸ்வரா் கோயிலில், இலுப்பூா் சொா்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதா், அன்னவாசல் விருத்தபுரீஸ்வரா் சமேத தா்மசம்வா்த்தினி விராலிமலை வன்னி மரம் கேசவ பெருமாள் மற்றும் பேராம்பூா், திருநல்லூா், ராஜாளிபட்டியில் உள்ள சிவாலயங்களிலும் சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு

சனீஸ்வரருக்கு திருக்கல்யாணம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


