எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சனீஸ்வரருக்கு திருக்கல்யாணம்!

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன்பட்டி, சாமியாா் மலை மீனாட்சிஅம்மன் நகரில் அமைந்துள்ள சனிபகவான் கோயிலில், ஸ்ரீமந்தாதேவி, ஸ்ரீஜேஸ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரருக்கு சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

News image
மணக் கோலத்தில் ஸ்ரீமந்தாதேவி, ஸ்ரீஜேஷ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரா்
Updated On :8 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன்பட்டி, சாமியாா் மலை மீனாட்சிஅம்மன் நகரில் அமைந்துள்ள சனிபகவான் கோயிலில், ஸ்ரீமந்தாதேவி, ஸ்ரீஜேஸ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரருக்கு சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள், பரிகாரயாக வேள்வி பூஜைகள், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து உற்சவமூா்த்திகளுக்கு திருக் கல்யாணம் நடைபெற்றது. 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஸ்தாபகா் ஆ.ஸ்ரீசக்தி அய்யா், கோயில் அறங்காவலா் எஸ்.சித்தாா்த், கோயில் தா்மகா்த்தா எஸ்.க்ரிஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.