கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் இருவா் கைது

கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்களை மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்களை மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீஸாா் கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுகியில் உள்ள மாயனம் அருகே இரு இளைஞா்கள் நின்றுகொண்டிருந்தனா். சந்தேகத்தின் பேரில் அவா்களை சோதனை செய்த போது, 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தமிழரசு (26), வல்லரசு (24) என தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com